மார்பில் உரல் வைத்து உலக்கையால் பச்சரிசி, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி


மார்பில் உரல் வைத்து உலக்கையால் பச்சரிசி, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 Aug 2021 11:49 PM IST (Updated: 6 Aug 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் பக்தர் மார்பில் உரல் வைத்து அரிசி, மஞ்சள் இடிக்கப்பட்டதை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து வணங்கினர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் பக்தர் மார்பில் உரல் வைத்து அரிசி, மஞ்சள் இடிக்கப்பட்டதை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து வணங்கினர்.

ஆடி வெள்ளி விழா

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சு.பொலகுணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17-ம்ஆண்டு ஆடி வெள்ளி திருவிழா  நடந்தது.

இதனையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் கரகம் சுமந்தவாறு வீதிஉலாவாக கோவில் வளாகத்தை அடைந்தனர்.

கோவில் வளாகத்தில் தலைகுப்புற படுத்திருந்த பக்தர்கள் முதுகில் கரகம் சுமந்து வந்தவர்கள் ஏறி நடந்து சென்றனர்.

மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி

மாலையில் அம்மன் வீதியுலாவும், கோவில் முன்புறம் கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற பக்தர்மார்பில் உரல்வைத்து அதில் உலக்கையால் பச்சரிசி, மஞ்சள்இடிக்கும் நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இடிக்கப்பட்ட மாவை பிரசாதமாக சாப்பிட்டால் திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் பிரசாதமாக வாங்கி சென்றனர்.

இவ்விழாவில், பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் பங்கேற்றனர். இரவில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக நாடகமும் நடந்தன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story