வீடு தீப்பற்றி எரிந்தது; பெண் தப்பினார்


வீடு தீப்பற்றி எரிந்தது; பெண் தப்பினார்
x
தினத்தந்தி 6 Aug 2021 6:28 PM GMT (Updated: 2021-08-06T23:58:38+05:30)

இளையான்குடி அருகே வீடு தீப்பற்றி எரிந்தது. பெண் உயிர் தப்பினார்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கீழாயூர் காலனியை சேர்ந்தவர் அப்துல்வாகித். இவருடைய மனைவி காதர்பாத்(வயது 50). அப்துல்வாகித் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் காதர்பாத் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அருகில் உள்ள வீடுகளுக்கு பால்பாக்கெட் போடுவதற்காக சென்று விட்டார். அந்த நேரத்தில் காதர்பாத்தின் ஓட்டு வீட்டில் திடீரென்று புகை கிளம்பியது. பின்னர் மளமளவென தீ பிடித்தது. உடனே அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இளையான்குடி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து நடந்த போது காதர்பாத் வெளியே சென்றதால் உயிர் தப்பினார். இந்த தீ விபத்தில் 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் சேதமாகி விட்டதாக காதர்பாத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அவருக்கு தாசில்தார் ஆனந்த் முதற்கட்டமாக சேலைகளும், அரிசி, பருப்பு வகைகளையும் வழங்கினார்.


Next Story