வாணியம்பாடி அருகே மணல் கடத்தல் இடங்களில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு


வாணியம்பாடி அருகே மணல் கடத்தல் இடங்களில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Aug 2021 12:23 AM IST (Updated: 7 Aug 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே மணல் கடத்தல் இடங்களில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே மேல்குப்பம், கொல்லகுப்பம், இளையநகரம் மற்றும் காட்டு வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களிலும் மேல்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் அதிக ஆழத்தில் மண் தோண்டி எடுத்துக் கடத்துவதும், பாலாற்றுப் பகுதியில் மணல் கொள்ளையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மணல் மற்றும் மண் எடுக்கும் மேற்கண்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மண், மணல் யார் அள்ளுகிறார்கள்? என்பது குறித்த விவரங்களை முன்னுக்கு பின் முரணான பதில் அளித்த கிராம நிர்வாக அலுவலருக்கு எச்சரிக்கை விடுத்தும், சம்பந்்தப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாக அளிக்கவும் உத்தரவிட்டார்.

Next Story