வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அரசு பஸ் கண்டக்டர் கைது


வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அரசு பஸ் கண்டக்டர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 12:35 AM IST (Updated: 7 Aug 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால், ஆக.7-
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிளங்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 45). புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் 14 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சல்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே சிவசங்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீசார் சிவசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story