திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் ஆய்வு கூட்டம். கலெக்டர் தலைமையில் நடந்தது


திருப்பத்தூர் மாவட்ட  உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் ஆய்வு கூட்டம். கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 6 Aug 2021 7:06 PM GMT (Updated: 6 Aug 2021 7:06 PM GMT)

திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

திருப்பத்தூர்

கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

 திருப்பத்தூர் மாவட்டத்தில் வார்டு மறுவரையறையின் படி, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டு அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படஉள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 1,779 கிராம வார்டு உறுப்பினர் பதவி,  208 ஊராட்சி மன்ற தலைவர் பதவி, 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து சட்ட மன்ற உறுப்பினர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க் கள் தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story