ஜப்பானில் வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 7 Aug 2021 1:21 AM IST (Updated: 7 Aug 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை பார்த்த போது ஏற்பட்ட பழக்கத்தின்போது ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்
வெளிநாட்டில் பழக்கம்
கரூர் மாவட்டம், முனையனூர் அருகே உள்ள பாப்பம்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவரும், பாலமுருகன் என்பவரும் ஆர்மேனியா நாட்டில் ேவலை பார்த்து வந்தனர். கார்த்திக், அங்குள்ள கால் சென்டர் ஒன்றிலும், பாலமுருகன் ஓட்டலிலும் பணிபுரிந்தனர்.
 இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கங்கனபள்ளியைச் சேர்ந்த பிலிப்குமார் என்பவர் கார்த்திக்குக்கு பழக்கமானார். அப்போது அவர் தன்னை டாக்டர் எனக் கூறியதுடன் கார்த்திக் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவருக்கும் ஜப்பானில் வேலை வாங்கி தருவதாகவும் அங்கு மாதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
 அதனை நம்பிய கார்த்திக், பாலமுருகன் இருவரும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்தை பிலிப்குமார் வங்கிக்கணக்கில் செலுத்தி உள்ளனர். மேலும், கார்த்திக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் இருந்து வேலை வாங்கித்தருவதாக பெற்ற ரூ.34 லட்சத்து 52 ஆயிரத்தையும் பிலிப்குமார் வங்கிக் கணக்கிலும், கூகுள் பே மூலமும் செலுத்தி உள்ளனர்.
4 பேர் மீது வழக்கு
 இதனையடுத்து கார்த்திக் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அந்த நாட்டில் இருந்து கரூர் திரும்பினர். இங்கிருந்து பிலிப்குமாரை தொடர்பு கொண்ட அவர்கள் தங்களுக்கு ஜப்பானில் வேலை தருமாறு கேட்டதாகவும், அதற்கு பிலிப்குமார் வேலை வாங்கி கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.நாட்கள் போனதே தவிர பிலிப்குமார், ஜப்பானில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், தாங்கள் செலுத்திய தொகையை திருப்பி தருமாறு கார்த்திக்கும், பாலமுருகனும் பிலிப்குமாரிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். அதனையடுத்து அவர், ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.28 லட்சத்து 90 ஆயிரத்தை தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் பொருளாதார குற்றப்பிரிவில் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பியூலா ஞான வசந்தி, பிலீப்குமார் மற்றும் சீனிவாசன், சிவா, சந்திப்பு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story