தாலிகட்ட முயன்றதால் சிறுமி தற்கொலை முயற்சி; வாலிபர் போக்சோவில் கைது


தாலிகட்ட முயன்றதால் சிறுமி தற்கொலை முயற்சி; வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 1:46 AM IST (Updated: 7 Aug 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

தாலிகட்ட முயன்றதால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முனியன்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 20). நேற்று முன்தினம் இவர், 17 வயது சிறுமிக்கு தாலி கட்ட முயன்றதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்துச்சென்ற சிறுமி, விஷ செடியை தின்று மயங்கி கிடந்தார். இதைக்கண்டவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி கட்ட முயற்சி செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story