கொரோனாவுக்கு ஒருவர் பலி
பெரம்பலூரில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 29 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 19 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 84 வயதுடைய முதியவர் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 101 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 247 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,269 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,112 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story