சேலத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன
சேலம்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்தை நோக்கி நேற்று காலை கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. குகை பகுதியில் வந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த கார் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போக்குவரத்து மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போக்குவரத்தை சீர் செய்ததுடன் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதியதில் 2 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன.
Related Tags :
Next Story