சேலம் மத்திய சிறையில் 85 போலீசார் அதிரடி சோதனை 2 மணி நேரம் நடந்தது
சேலம் மத்திய சிறையில் 85 போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை 2 மணி நேரம் நடைபெற்றது.
சேலம்
மத்திய சிறை
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 900-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கஞ்சா, புகையிலை பொருட்கள், செல்போன் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் சிறையில் அவ்வப்போது போலீசார் திடீரென சோதனை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த சோதனையின் போது சிறையில் 2 செல்போன்கள் சிக்கின. இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் சிறையில் மீண்டும் சோதனை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
போலீசார் சோதனை
அதன்பேரில் நேற்று அதிகாலை போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் மாநகர மற்றும் சிறை போலீசார் என மொத்தம் 85 பேர் மத்திய சிறைக்கு சென்றனர். பின்னர் கைதிகள் தங்கியிருக்கும் ஒவ்வொரு அறைக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
சிறை முழுவதும் நடந்த இந்த சோதனை அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை என 2 மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின் போது கஞ்சா, புகையிலை, செல்போன் உள்ளிட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story