மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் சாலையில் மரக்கிளைகளை போட்டதால் பரபரப்பு


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் சாலையில் மரக்கிளைகளை போட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2021 2:31 AM IST (Updated: 7 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் சாலையில் மரக்கிளைகளை போட்டதால் பரபரப்பு

நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தரக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மரக்கிளைகளை வெட்டி சாலையில் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நவணி ஊராட்சி. இந்த ஊராட்சியின் 7-வது வார்டிற்கு உட்பட்ட தோட்டக்கூர்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து அங்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணி தொடங்கப்பட்டது. பின்னர் தனிநபரின் ஆட்சேபனையை அடுத்து பணி பாதியில் நிறுத்தப்பட்டது..
சாலை மறியல்
இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தரக்கோரி நேற்று அங்கு பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வாகனங்கள் செல்வதற்கு தடையாக மரக்கிளைகளை வெட்டி சாலையில் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா, ஊராட்சி தலைவர் கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவில் கட்டி தந்தால் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறை தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் தண்ணீர் தொட்டியை காலதாமதம் இன்றி கட்டித்தர வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால்‌ அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
=========

Next Story