மாதந்தோறும் ஒரு கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்க முடிவு; பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
மாலூர் தொழிற்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் அடுத்த மாதம் 2-வது வாரம் முதல் செயல்பட தொடங்கும் என்றும், ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கோலார்: மாலூர் தொழிற்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் அடுத்த மாதம் 2-வது வாரம் முதல் செயல்பட தொடங்கும் என்றும், ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம்
கோலார் மாவட்டம் மாலூர் தொழிற்பேட்டையில், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் அமைக்கும் பணி கடந்த 3 மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது அங்கு கட்டிட பணிகள் முடிந்து கொரோனா தடுப்பூசி தயாரிப்புகான முதல்கட்ட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசியான கோவிவேக்சின் தடுப்பூசியை தென் மாநிலங்களுக்கு வினியோகிக்க வசதியாக மாலூரில் பாரத் பயோடெக் நிறுவனம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு முடிவு
அடுத்த மாதம் 2-வது வாரத்தில் கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கப்படும். அதன்படி மாதந்தோறும் ஒரு கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிகளை தென் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story