பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
சென்னை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 31.47 அடியாக பதிவாகியது. 2.100 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 561 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதை கருத்தில்கொண்டு நேற்று காலை பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது.
இதுபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 9 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Related Tags :
Next Story