பழமைவாய்ந்த கோவில்களில் ஆய்வு
பழமைவாய்ந்த கோவில்களில் ஆய்வு
உடுமலை:
இந்திய தொல்லியல் துறையின் தென்மண்டல அதிகாரியும், ஆலய ஆய்வு திட்டத்தின் தொல்லியல் முதன்மை கண்காணிப்பாளருமான கு.மூர்த்தீஸ்வரி தலைமையில் உதவி தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா மற்றும் துறை அலுவலர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களை ஆவணப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கம், கடத்தூர், சோழமாதேவி, கண்ணாடிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களுக்கு சென்று கட்டிடக்கலைகள் மற்றும் கல்வெட்டுகளை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து உடுமலை அன்சாரி வீதியில் உள்ள நூலகத்திற்கு தமிழக தொல்லியல்துறை முதன்மை கண்காணிப்பாளர் வந்திருந்தார். அப்போது அவர் நூலகத்தில் உள்ள வரலாற்று நூல்களை பார்வையிட்டார்.அப்போது நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள், தொல்லியல் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக துல்லியமான கையேடு தேவை என்று கோரிக்கை விடுத்தனர்.இதற்கு முதன்மை கண்காணிப்பாளர், தொல்லியல் குறித்த துல்லியமான கையேடு வெளியிட ஆவனசெய்வதாகக் கூறினார். நூலகத்திற்கு வந்தஅவருக்கு நூலகர் வீ.கணேசன் நினைவுப்பரிசாக புத்தகம் வழங்கினார்.அப்போது நூலகர்கள் மகேந்திரன், பிரமோத்,உடுமலை ஶ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கற்பகவல்லி, சித்தமருத்துவர் சரவணன்மற்றும் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story