தென்னை நார்க்கட்டி தொழிற்சாலையில் தீ
தென்னை நார்க்கட்டி தொழிற்சாலையில் தீ
போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தென்னை நார்க்கட்டி (பித் பிளாக்) தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை இந்த தொழிற்சாலையில் நார்க்கட்டிகள் தயாரிப்பதற்காக வைத்திருந்த நார்த்துகள்களில் திடீரென்று தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென்று பற்றி எரிந்தது.
இதனையடுத்து உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story