வத்தலக்குண்டுவில் தேவாலயத்துக்குள் புகுந்து உண்டியல் பணம் திருட்டு


வத்தலக்குண்டுவில் தேவாலயத்துக்குள் புகுந்து உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 Aug 2021 4:26 PM GMT (Updated: 7 Aug 2021 4:26 PM GMT)

வத்தலக்குண்டுவில் தேவாலயத்துக்குள் புகுந்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில், மதுரை சாலையில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலய வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் புகுந்துள்ளார். பின்னர் அவர் ஆராதனை கூடத்தின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அப்போது அங்கிருந்த உண்டியலை அவர் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினார். அதன்பிறகு அந்த உண்டியலை தேவாலய வளாகத்திலேயே போட்டுவிட்டு, பணத்துடன் தப்பியோடிவிட்டார். 
இதற்கிடையே நேற்று காலை வழக்கம்போல் தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த வந்த சிலர், ஆராதனை கூடத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், ஆலய வளாகத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதையும் கண்டனர். உடனே இதுகுறித்து அவர்கள் ஆலய நிர்வாகி ஞானசேகருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் தேவாலயத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story