திருவாரூரில் கைத்தறி கண்காட்சி
திருவாரூரில் கைத்தறி கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ண்ன தொடங்கி வைத்தார்.
திருவாரூர்:
திருவாரூரில் கைத்தறி கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ண்ன தொடங்கி வைத்தார்.
கைத்தறி கண்காட்சி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தி கவுரவிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதேசி இயக்கத்தை நினைவு கூரும் வகையில் ஆகஸ்டு 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முதியோர் ஓய்வூதியம்
அதனை தொடர்ந்து 4 நெசவாளர்களுக்கு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.78 ஆயிரம் தொகையை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பானுகோபன், சரகர் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த நிர்வாக்கழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story