தாய்-மகள் கிணற்றில் குதித்து தற்கொலை
கண்ணமங்கலம் அருகே குடும்பத்தகராறில் தாய்-மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே குடும்பத்தகராறில் தாய்-மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பிணமாக கிடந்த தாய்-மகள்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் காலனியை சேர்ந்த சிவராஜ் (வயது 40) என்பவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வன்னிவேடு பகுதியை சேர்ந்த வரதராஜன் மகள் மரகதம் (35) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய மகள் அனுஷ்கா (6).
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஓட்டலில் சிவராஜ் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சிவராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி மரகதத்திடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் சிவராஜிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக மரகதம், தனது மகள் அனுஷ்காவுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
தற்கொலை
நேற்று காலையில் கொளத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட விவசாய கிணற்றில் மரகதம், சிறுமி அனுஷ்கா இருவரும் பிணமாக கிடப்பதாக கண்ணமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இருந்து தாய்-மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கண்ணமங்கலம் போலீசில் மரகதத்தின் தந்தை வரதராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடும்பத்தகராறில் இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய்-மகள் கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story