தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதியில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை


தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதியில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2021 10:42 PM IST (Updated: 7 Aug 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது32). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவருடைய தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 
இதனால் மனமுடைந்த முனிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுமாப்பிள்ளை
ஓசூர் அருகே முத்தாலி பக்கமுள்ள கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணா. இவருடைய மகன் நவீன்குமார் (வயது 31). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குவாரியில் கேஷியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், இவர் முன்பு விவசாயம் செய்து செய்து வந்தபோது அதில் நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த நவீன்குமார், குவாரி அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story