கருணாநிதி உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி


கருணாநிதி உருவப்படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 7 Aug 2021 10:53 PM IST (Updated: 7 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கருணாநிதி உருவப்படத்துக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நினைவு தினத்தையொட்டி கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நினைவு தினம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜபாண்டி, எஸ்.ஏ.செந்தில்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சுதாகர், அருணகிரி, லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story