236 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
236 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதி,
கமுதியை அடுத்துள்ள பெருநாழியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கமுதி குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.ஜி. முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் பெருநாழியில் இருந்து முத்துசெல்லபுரம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றபோது போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்ப முயன்றனர்.
இதையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து, காரை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 236 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரை சேர்ந்த பொன்னையா மகன் ராஜேந்திரன் (வயது61), ராஜகுருசாமி மகன் கணேசன் (47) ஆகிய 2 பேரை கைது செய்து கார் மற்றும் 236 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story