10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2021 6:50 PM GMT (Updated: 2021-08-08T00:25:34+05:30)

துடியலூர் அருகே செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

துடியலூர்,

கோவை ரத்தினபுரி அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் கண்ணன் என்ற அப்துல்காதர். இவருடைய மகள் பவுசியா (வயது 15). இவள் கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். 

தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டு உள்ளதால், பவுசியா ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வந்தாள். இதற்காக அவளது பெற்றோர், புதிதாக செல்போன் வாங்கி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மாணவி பவுசியா, வீட்டு வேலைகள் செய்யாமல் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவளுடைய தாய், கண்டித்துள்ளார். இதன் காரணமாக மாணவி மனவருத்தத்துடன் காணப்பட்டாள்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். வெளியே சென்று வந்த பெற்றோர், மகள் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது.

இதுகுறித்து அறிந்த துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால், 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story