எருமப்பட்டி அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை


எருமப்பட்டி அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2021 12:22 AM IST (Updated: 8 Aug 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

எருமப்பட்டி,

எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மகன் கவின்குமார் வயது (வயது 16). இவர் காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

கவின்குமார் தந்தையிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஜெயராஜ் இப்போது செல்போன் வாங்கி தர முடியாது என்று கூறினாராம். இதனால் மனமுடைந்த கவின்குமார் வீட்டில் விஷத்தை குடித்தார். இதை அறிந்த பெற்றோர் உடனடியாக மகனை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவர் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவர் கவின்குமார் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story