ஐ.டி.ஐ.முடித்த மாணவர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி வழங்க கலெக்டர் அறிவுரை
திருப்பத்தூர் மாவட்டத்தில் ள்ள நிறுவனங்கள் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி வழங்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ள்ள நிறுவனங்கள் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி வழங்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.
திறன்மேமபாட்டு குழு
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் மேம்பாட்டு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்த இளைஞர்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான பயிற்சியினை மருத்துவமனையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப்பணிகள் சார்ந்த குறுகிய கால பயிற்சி வழங்க வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலருடன் ஒருங்கிணைந்து ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து தொழில் பழகுனர் பயிற்சி வழங்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் ஒரு முனை தீர்வு குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு மூலம் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதி மற்றும் உரிமங்கள் விரைவில் கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஒற்றை சாளர தீர்வு
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச் சாளர இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்து கூடுதலாக
சுகாதாரதுறையிடமிருந்து பெறவேண்டிய தடையில்லா சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையினரிடமிருந்து பெறவேண்டிய உரிமம் மற்றும் மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்தமின் இணைப்பு ஆகியவற்றிற்கான சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இதன்வாயிலாக வரப்பெற்ற நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒரு மாதகாலத்திற்குள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில் என்ன தேவைகள் தேவைப்படுகிறன என்று மேலும் மகளிர் திட்ட இயக்குனர் கண்டறிந்து அதற்கேற்றவாறு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட பிற்பட்டேர் நல அலுவலர் அவரது துறையின் மூலம் வரப்பெற்ற மனுக்களில் எத்தனை நபர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தெடுத்து அவர்களில் தகுதிக்கேற்றவாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பயிற்சி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் உ.மாமகேஸ்வரி, பயிற்சி அலுவலர் சுகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story