சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் 3 பேர் போக்சோவில் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 15 வயது மற்றும் 14 வயது சிறுமிகள். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பட்டீஸ்வரன் (20) என்பவர் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்து உள்ளனர். இதற்கிடையில் காதலிக்குமாறு வற்புறுத்தி பட்டீஸ்வரன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோன்று 14 வயது சிறுமியை ராம்குமார் (19) என்பவர் காதலிக்குமாறு வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். மேலும் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பட்டீஸ்வரன், ராம்குமார் ஆகியோர் கூலி வேலை செய்து வருவதும், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் இதற்கு ரமேஷ் (25) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story