‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்


‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:08 AM IST (Updated: 8 Aug 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடங்கப்பட்டது.

சுரண்டை:
சுரண்டை அருகே கடையாலுருட்டி கிராமத்தில் தமிழக அரசின் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்ட தொடக்க விழா நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அருணா வரவேற்றார்.

மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் 1,808 பயனாளிகளுக்கு மருத்துவ தொகுப்புகள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் வழங்கி பேசினார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், நடமாடும் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Story