மணல் கடத்திய 5 பேர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 5 பேர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:14 AM IST (Updated: 8 Aug 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் போலீசாருக்கு கல்லாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாண்டகப்பாடி- பிம்பலூர் இடையே கல்லாற்றில் மாட்டு வண்டிகளில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் பசும்பலூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 52), சாமிக்கண்ணு (36), பெரியசாமி (35), கலியமூர்த்தி (38), கந்தசாமி (40) என்பதும், 5 பேரும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story