கணவரை கொன்ற வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்


கணவரை கொன்ற வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:21 AM IST (Updated: 8 Aug 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

கணவரை கொன்ற வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் சுமதி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்
கொலை வழக்கில் கைது
வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி இளமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இளமதி வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மணிகண்டன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளமதி உருட்டுக்கட்டையால் கணவர் மணிகண்டனை அடித்து கொலை செய்தார். இதுதொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளமதியை கைது செய்தனர்.
பணியிடை நீக்கம்
கொலை வழக்கில் ஆசிரியை இளமதி கைது செய்யப்பட்டதால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்தனர்.  இதைத்தொடர்ந்து ஆசிரியை இளமதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் சுமதி உத்தரவிட்டார்.


Next Story