சேலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு மேலும் 91 பேருக்கு கொரோனா 5 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 70 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 32 பேர், வீரபாண்டியில் 10 பேர், தாரமங்கலத்தில் 8 பேர், மேச்சேரியில் 7 பேர், எடப்பாடியில் 6 பேர், ஓமலூரில் 5 பேர், சங்ககிரி மற்றும் பனமரத்துப்பட்டியில் தலா 4 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 103 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும், நோய் தொற்றுக்கு 835 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,582 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story