சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்


சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:42 AM IST (Updated: 8 Aug 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர், 
சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 மாவட்ட மாநாடு 
விருதுநகரில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் 15- வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் தொடங்கி வைத்தார்.
 மாவட்ட இணை செயலாளர் லட்சுமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் சுப்புக்காளை நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.
 புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்து மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் பேசினார். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.
காலிப்பணியிடங்கள் 
 அரசு துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்கள் பணியில் அமர்த்த வேண்டும். அரசு ஊழியர்களை போல் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறையை 9 மாதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
 சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். பணி முடித்த நாளை கணக்கில் கொண்டு தேர்வுநிலை சிறப்புநிலை, தேக்கநிலை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது வழங்கக்கூடிய ஒட்டு மொத்த பணிக்கொடை தொகை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் சுதந்திர கிளாரா வரவேற்றார். முடிவில் எஸ்தர் நன்றி கூறினார். 

Next Story