சங்கரன்கோவில் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சங்கரன்கோவில் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பகுதியில் சாலையோரம் கவனிப்பாரற்ற நிலையில் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் சின்ன கோவிலாங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு 50 மூட்டைகளில் இருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.
பின்னர் அவற்றை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர். ரேஷன் அரிசியை கடத்தி செல்வதற்காக வைத்திருந்தவர்கள் போலீசாருக்கு பயந்து அவற்றை சாலையோரம் விட்டு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story