ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
பாளையங்கோட்டையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரமநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், சுதந்திர தினமான வருகிற 15-ந்தேதிக்கு பிறகு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சுழற்சி முறையில் திறந்திட தமிழக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மாநில அரசும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக 11 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story