கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி


கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
x
தினத்தந்தி 8 Aug 2021 7:04 AM IST (Updated: 8 Aug 2021 7:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு 2 முதியவர்கள் உயிரிழந்தனர்

திருச்சி, 
திருச்சி மாவட்டத்தில் நேற்று 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 72,926 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 737 பேர் உள்ளனர். 60 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 71,217 ஆகும். கொரோனாவுக்கு நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 70 வயது முதியவர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 74 வயது முதியவர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story