நிலத்தகராறில் மாமனார் -மாமியாரை உறவினர்களுடன் சேர்ந்து தாக்கிய மருமகள்


நிலத்தகராறில் மாமனார் -மாமியாரை உறவினர்களுடன் சேர்ந்து தாக்கிய மருமகள்
x
தினத்தந்தி 8 Aug 2021 7:04 AM IST (Updated: 8 Aug 2021 7:04 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தகராறில் மாமனார் -மாமியாரை உறவினர்களுடன் சேர்ந்து மருமகள் தாக்கினார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழபெரம்பலூர் கிராமத்தில் ஒருவர் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது பூர்வீக சொத்தை சரிபாதியாக பிரித்து மகன்களுக்கு கொடுத்துள்ளார். இருப்பினும் அவருடைய 2-வது மகனின் மனைவி, தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தின் அளவு குறைவாக இருப்பதாக கூறி, தொடர்ந்து தனது மாமனாரிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக குன்னம் போலீஸ் நிலையத்தில் இரண்டு முறை புகார் மனு அளிக்கப்பட்டு, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் 2-வது மகனின் மனைவி கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடைபெற்றது. ஆனால் சுமூக முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் 2-வது மகனின் மனைவி, மாமனார் வீட்டிற்கு சென்று மாமனார் மற்றும் மாமியாரை தனது உறவினர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பெரிய மருமகள், மாமனார் மற்றும் மாமியாரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இதில் அவரும் தாக்கப்பட்டு காயம் அடைந்தார். இதனை அறிந்த கிராம மக்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டினர். மேலும் டீக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து புகாரின்பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனார், மாமியாரை உறவினர்களுடன் சேர்ந்து சின்ன மருமகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story