திருவெறும்பூரில் ஆசிரியையிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவெறும்பூரில் ஆசிரியையிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Aug 2021 7:21 AM IST (Updated: 8 Aug 2021 7:21 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியையிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்து சென்ற முகமூடி அணிந்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர்,

ஆசிரியையிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்து சென்ற முகமூடி அணிந்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசிரியை

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காந்தி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது 48). இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை காட்டூர் கைலாஷ் நகரில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூர் சாலையில் சைக்கிளில் கொய்யாப்பழம் விற்றவரிடம் கொய்யாப்பழம் வாங்கிக்கொண்டிருந்தார். 

தாலி சங்கிலி பறிப்பு

அப்போது திரும்பியபோது, இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பஞ்சவர்ணம் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அப்போது, அவர் சங்கிலியை இறுகப்பிடித்துக்கொள்ளவே 2 பவுன் மட்டும் அவா் கையில் சிக்கியது. மீதம் 7 பவுனை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story