இந்திய வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவை- ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய திருச்சி வீராங்கனை சுபா பேட்டி


இந்திய வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவை- ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய திருச்சி வீராங்கனை சுபா பேட்டி
x
தினத்தந்தி 8 Aug 2021 7:27 AM IST (Updated: 8 Aug 2021 7:27 AM IST)
t-max-icont-min-icon

இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை என்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி திரும்பிய வீராங்கனை சுபா கூறினார்.


செம்பட்டு, 
இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை என்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி திரும்பிய வீராங்கனை சுபா கூறினார்.

திருச்சி வீராங்கனைகள்

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி விமான நிலையம் வந்த திருச்சியை சேர்ந்த வீராங்கனைகள் சுபா மற்றும் தனலட்சுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் வீராங்கனை சுபா கூறியதாவது:-
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட எங்களுக்கு அரசு வேலை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற கடுமையான பயிற்சி மேற்கொண்டாலும் கூட, ஒலிம்பிக் களம் கடுமையாக இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை. 

அதிக பயிற்சி 

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கடும் பயிற்சி பெற்று நிச்சயம் பதக்கம் வெல்வோம். இந்திய வீரர்களுக்கு தொடக்க நிலையிலிருந்தே அடிப்படை பயிற்சி முதல் அனைத்து பயிற்சிகளையும் ஊக்கமும் வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் அது போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கடுமையான பயிற்சி எடுத்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இன்னும் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை எங்களின் தோல்வி உணர்த்தி உள்ளது.
இவ்வாறு அவா் கூறினார்.

இதைத்தொடர்ந்து வீராங்கனை தனலட்சுமி கூறும்போது, எனக்கு அரசு வேலை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை களமிறக்காததற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. கடந்த காலங்களில் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் தமிழகத்திற்கு பெரிய வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் தற்போது வாய்ப்புகள் வருகிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறோம், என்றார்.

Next Story