மதுராந்தகம் அருகே அடகு கடைக்காரர் நகைகளுடன் தப்பி ஓடிவிட்டதாக பொதுமக்கள் மறியல்
முதுகரை, மதுராந்தகம், கொன்டிரச்சேரி, நோத்தப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் அவரிடம் மாதந்தோறும் தீபாவளி சீட்டு செலுத்தி வந்தனர்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மதுரா கொண்டிரச்சேரி முதுகரையில் வடமாநிலத்தை சேர்ந்த கலயாண் (வயது 44) நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வந்தார். முதுகரை, மதுராந்தகம், கொன்டிரச்சேரி, நோத்தப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் அவரிடம் மாதந்தோறும் தீபாவளி சீட்டு செலுத்தி வந்தனர். அதற்கு உரிய நகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நகை அடமானம் வைத்த ஒரு சிலருக்கு ரசீது கொடுத்துள்ளார். ஒரு சிலருக்கு ரசீது கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று திடீரென கடை மூடப்பட்டிருந்தது. அடகு கடைக்காரர் நகைகளுடன் தப்பி ஓடி விட்டதாக கூறி நகை அடகு வைத்த பொதுமககள் கடையை முற்றுகையிட்டு மதுராந்தகம்-சூனாம்பேடு சாலையில் முதுகரை என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story