மனைவி ஆடம்பரமாக செலவு செய்ததால் விரக்தி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி ஆடம்பரமாக செலவு செய்ததால் விரக்தி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2021 12:03 PM IST (Updated: 8 Aug 2021 12:03 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்த மனைவி ஆடம்பரமாக செலவு செய்ததால் விரக்தி அடைந்த வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் கல்யாணி செட்டி நகரைச்சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

ரம்யா, தனது கணவர் ஆனந்துக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தை ஆன்லைன் மூலம் எடுத்து அதனை ஆடம்பரமாக செலவு செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் திடீரென தனது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் குறையவே அதிர்ச்சி அடைந்த ஆனந்த், இதுபற்றி மனைவியிடம் கேட்டார். அதற்கு ரம்யா, குடும்ப செலவுக்காக செலவு செய்ததாக சாக்குபோக்கு கூறினார்.

தனக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மனைவி ஆடம்பரமாக செலவு செய்ததால் மனமுடைந்த ஆனந்த், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story