ஊத்துக்கோட்டை அருகே மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா


ஊத்துக்கோட்டை அருகே மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 8 Aug 2021 5:30 PM IST (Updated: 8 Aug 2021 5:30 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பெங்களூருவை சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதிநவீன ஜெனரேட்டர்கள் வழங்கியது.

இதை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பால மணிகண்டன் ஆகியோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க .செயலாளர் டீ.கே.சந்திரசேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ஜி.மேம்மன் மருத்துவ உபகரணங்களை வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஞானமுத்து, ஊராட்சிமன்ற தலைவர் சிவம்மா செஞ்சய்யா, பூண்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. அமைப்பாளர் பெருஞ்சேரி ரவி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story