ஆத்தூர் அருகே மது விற்றவர் கைது


ஆத்தூர் அருகே மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2021 6:15 PM IST (Updated: 8 Aug 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே, மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்

ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் முக்காணி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள நாராயணசாமி கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், நெல்லை மாவட்டம் கூனியூர் பட்டமுத்து மகன் அய்யப்பன் (வயது 27) என்றும், தற்போது அவர் முக்காணியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story