சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்


சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 8 Aug 2021 6:18 PM IST (Updated: 8 Aug 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். முகாமையொட்டி அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தடுப்பூசி போடுமாறும், சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தியும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ், சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story