மணல் குவியலை அகற்றிய இளைஞர்கள்
சின்னாளப்பட்டி அருகே 4 வழிச்சாலையோரத்தில் மணல் குவியலை அப்பகுதி இளைஞர்கள் அகற்றினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக இருபுறமும் வெள்ளை நிற கோடு போடப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதியில் சின்னாளப்பட்டி பிரிவு, செட்டியபட்டி பிரிவு, கலிக்கம்பட்டி பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் குவிந்து கிடக்கிறது.
இந்த மணல் குவியலில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்து வந்தனர். இந்த மணல் குவியலை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாலை ஓரத்தில் இருந்த மணல் குவியலை அகற்றினர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story