சிவன்மலை முருகன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்


சிவன்மலை முருகன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 8 Aug 2021 9:37 PM IST (Updated: 8 Aug 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

சிவன்மலை முருகன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்

காங்கேயம்:
ஆடி அமாவாசையையொட்டி சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் 6 மணிக்கு அடி விழா பூஜை செய்யப்பட்டது. 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 12 மணிக்கு உச்சிகால பூஜையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள் பிரகாரத்தில் சுற்றி வந்தனர். கொரோனா தெற்று காரணமாக நேற்று பக்தர்களை அனுமதிக்கவில்லை. சிவாச்சாரியார்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலர், பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Next Story