வாழ்ந்து மறைந்தமுன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் குவிந்தனர்.

வாழ்ந்து மறைந்தமுன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் குவிந்தனர்.
x
தினத்தந்தி 8 Aug 2021 9:47 PM IST (Updated: 8 Aug 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

வாழ்ந்து மறைந்தமுன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் குவிந்தனர்.

போடிப்பட்டி:
வாழ்ந்து மறைந்தமுன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் குவிந்தனர்.
தடை
 ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தன்று உடுமலையையடுத்த திருமூர்த்திமலை பாலாற்றங்கரை மற்றும் கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.இந்த ஆண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக திருமூர்த்திமலைக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை முதலே கொழுமம் காசி விஸ்வநாதர் கோவில் அருகிலுள்ள அமராவதி ஆற்றங்கரையிலுள்ள படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.அவர்களை கொரோனா விதிகளை பின்பற்றுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
 சூரியனின் நகர்வைக் கருத்தில் கொண்டுஒவ்வொரு ஆண்டும் தட்சிணாயனம், உத்தராயணம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதில் தை முதல் ஆனி வரை உத்தராயணம் எனப்படும் பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் எனப்படும் இரவுப் பொழுதாகவும் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் தேவர்களுக்கு இரவுப்பொழுது தொடங்குவதால் நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக நமது முன்னோர்கள் ஆடி மாதத்தில் பூமிக்கு வருவதாக ஐதீகம்.எனவே அவர்களை வரவேற்கும் விதமாக ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
தங்கம் வாங்க சிறந்த நாள்
அட்சய திருதியை என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாக மாறி விட்டது.அதுபோல ரவி புஷ்ய யோகம் எனப்படும் தினத்தில் எந்த ஒரு காரியம் செய்தாலும் அது பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கையாகும். இதனால் இந்த நாள் தங்கம் வாங்க சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. 
அதன்படி ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை தினத்தன்று பூசம் நட்சத்திரம் ரவி புஷ்ய யோகம் என்றழைக்கப்படுகிறது.ஆடி   அமாவாசை தினமான நேற்று ரவி புஷ்ய யோகம் சேர்ந்து வந்ததால் ஒருசிலர் தங்கம் வாங்கினர்.

Next Story