தென்னை மரங்களில் பாதிப்பை உண்டாக்கும் வெள்ளை ஈக்களைகற்றாழை சாகுபடி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று விவசாயிகள் ஆலோசனை வழங்கியுள்ளார்.


தென்னை மரங்களில் பாதிப்பை உண்டாக்கும் வெள்ளை ஈக்களைகற்றாழை சாகுபடி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று  விவசாயிகள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
x
தினத்தந்தி 8 Aug 2021 9:51 PM IST (Updated: 8 Aug 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

தென்னை மரங்களில் பாதிப்பை உண்டாக்கும் வெள்ளை ஈக்களைகற்றாழை சாகுபடி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று விவசாயிகள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

போடிப்பட்டி, 
தென்னை மரங்களில் பாதிப்பை உண்டாக்கும் வெள்ளை ஈக்களைகற்றாழை சாகுபடி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று  விவசாயிகள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரசாயன மருந்துகள்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்தநிலையில் சமீப காலங்களாக தென்னையில் வெள்ளை ஈக்களின்தாக்குதல் விவசாயிகளுக்கு தொல்லை தருவதாகஉள்ளது. ரசாயன மருந்துகளால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையில் தென்னை சாகுபடி செய்து வரும் உடுமலையையடுத்த அந்தியூரை சேர்ந்த விவசாயி செல்வராஜ்கற்றாழை மூலம் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும் என்று வழிகாட்டுகிறார்.
மூடாக்கு
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டி வருவதற்கு காரணம் இயற்கை விவசாயம் தான். ரசாயனங்களால் சாதிக்க முடியாததை இயற்கையால் சாதிக்க முடியும். அதற்கு வெள்ளையாக இருக்கும் எதையும் நிலத்தில் இட வேண்டாம். வெளியிலிருந்து எதையும் தோட்டத்துக்குள் கொண்டு வர வேண்டாம். தோட்டத்திலிருந்து தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்களை தவிர வேறு எதையும் வெளியே கொண்டு போக வேண்டாம் என்பதே இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சமாகும். அதாவது வெளியிலிருந்து கொண்டு வரப்படும் ரசாயன உரங்களை நிலத்தில் இட வேண்டாம்.
 மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம் இவற்றை விட சிறந்த உரம் எதுவும் இல்லை. மேலும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் மட்டை, ஓலை, பாளை என அனைத்தையும் மரங்களுக்குக் கீழேயே மூடாக்காக போட்டு வைக்கலாம். அந்தவகையில் ஒரு மரம் ஆண்டுக்கு சராசரியாக 125 கிலோ கழிவுகளை தனக்கான உரமாக கொடுக்கிறது. அது கொடுப்பதை அதற்கே திருப்பிக் கொடுத்தால் போதுமானது. இவ்வாறு மரக்கழிவுகளை கொண்டு மூடாக்கு அமைக்கும் போது தண்ணீர் ஆவியாவது தடுக்கப்பட்டு ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது. இதனால் குறைந்த அளவு தண்ணீரிலேயே சிறந்த மகசூல் எடுக்க முடிகிறது.
மண்புழுகழிவுகள்
மேலும் ஈரப்பத்தை பயன்படுத்தி மண்புழுக்களை தோட்டத்திலேயே வளர்க்கலாம். ஒரு தோட்டத்தில் ஒரு சதுர அடியில் நம்மால் 10 மண் புழுக்களை பார்க்க முடிந்தால் அந்த தோட்டத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் மண் புழுக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த மண் புழுக்கள் மண்ணில் அங்கும் இங்கும் ஊர்ந்து செல்லும்போது மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் தன்மை அடைவதுடன் மண் புழு கழிவுகளால் மண் வளமும் மேம்படுகிறது. 
தற்போது தென்னைவிவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த அனுபவத்தின் மூலம் அறிந்து கற்றாழையை பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறேன்.தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக கற்றாழை நடவு செய்திருக்கிறேன்.இவை கவர்ச்சிப் பயிராக செயல்பட்டு வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுக்கின்றன.இதனால் வெள்ளை ஈக்கள் கற்றாழையில் முட்டையிடுகின்றன. ஆனால் கற்றாழையிலுள்ள கசப்புத்தன்மை காரணமாக அவற்றின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. இதனால் வெள்ளை ஈக்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது.அத்துடன் கற்றாழையை மருந்துப்பொருட்களிலும், அழகு சாதனப்பொருட்களிலும் பயன்படுத்துவதால் கேரள மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வந்து நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள்.இதனால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story