பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசை களை இழந்தது
பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பேரூர் படித்துறை யில் ஆடி அமாவாசை களை இழந்து காணப்பட்டது. அங்கு போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூர்
பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பேரூர் படித்துறை யில் ஆடி அமாவாசை களை இழந்து காணப்பட்டது. அங்கு போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடி அமாவாசை
புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் பேரூரில் நொய்யல் படித் துறை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். தற்போது கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பேரூர் படித்துறைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
படித்துறையில் பாதுகாப்பு
மேலும் இங்கு பொதுமக்கள் கூடுவதை தடுக்க, பேரூர் பட்டீஸ் வரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தன. அதுபோன்று கோவிலும் பூட்டப்பட்டு இருந்தது.
அத்துடன் படித்துறைக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க அங்கு போலீசாரும், பேரூராட்சி பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் சிலர் வாகனங்களில் படித் துறையை நோக்கி வந்தனர்.
பொதுமக்கள் வாக்குவாதம்
அப்போது அங்கு போலீசார் அவர்களை ஒலிபெருக்கி மூலம் திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக பக்தர்கள் இல்லாமல் பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசை களை இழந்து காணப்பட்டது.
இதற்கிடையே பேரூர் வந்த பக்தர்கள் சிலர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருந்தபோதிலும் போலீசார் அவர்களை அங்கு அனுமதிக்காததால் அவர்கள் அங்குள்ள நொய்யல் ஆற்று பாலத்தின் மீது நின்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.
வீடுகளில் வழிபாடு
மேலும் சிலர் படித்துறையை தாண்டி சற்று தூரம் தள்ளி நொய்யல் ஆற்றில் வழிபாடு செய்தனர். மேலும் குறிச்சி குளம் அருகில் ஒரு சிலர் படையல் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பொது இடங்களில் நீராட தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு படையல் வைத்து தர்ப்பண வழிபாடு நடத்தினர். இந்த தடை உத்தரவு காரணமாக பூ மார்க்கெட்டில் குறைவான அளவிலேயே பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story