தடுப்பு கம்பியில் கார் மோதி வாலிபர் படுகாயம்
தடுப்பு கம்பியில் கார் மோதி வாலிபர் படுகாயம்
அவினாசி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கமல் பிரசாத் (வயது 26) பி.இ. பட்டதாரியான இவர் நேற்று கோவையிலிருந்து காரில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவினாசியை அடுத்து தெக்கலூர் அருகே முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இவரது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் தடுப்பு கம்பி மீது மோதி காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கமல் பிரசாத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவனாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story