ஆடி அமாவாசை நாளான நேற்று கோவில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது
ஆடி அமாவாசை நாளான நேற்று கோவில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது
காங்கேயம்,
கொரானா ஊரடங்கு காரணமாக காங்கேயம் பகுதியில் பிரதான கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆடி அமாவாசை நாளான நேற்று கோவில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆடி அமாவாசை
வருடம் தோறும் ஆடி அமாவாசை நாளில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
காங்கேயம் பகுதியில்பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில், பாப்பினி பெரியநாயகி அம்மன் கோவில், மடவிளாகம் ஆருத்ர கபலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவில், காடையூர் கடையீஸ்வரன் கோவில், பழையகோட்டை ரோடு காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வர்.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
நடப்பாண்டு கொரோனா பரவலைத் தடுக்க அரசு ஊரடங்கு விதித்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கேயம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் மட்டுமே நடைபெற்றன. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
வெறிச்சோடியது
கொங்கு சமுதாயத்தின் பல்வேறு குலத்தவர்களின் குலதெய்வக் கோவில்கள் காங்கேயத்தை சுற்றியே அமைந்துள்ளதால் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தால் காங்கேயம் பஸ் நிலையம் நிரம்பி வழியும். பஸ்களிலும் கூட்டம் அலைமோதும். நேற்று கோவில்களில் சாமி கும்பிட பக்தர்களுக்கு அனுமதி இல்லையென்பதால் காங்கேயம் பஸ் நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரத்தில் காங்கேயம் பகுதியில் உள்ள கிராமக் கோவில்களில் அந்தந்த கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் சென்று பொங்கலிட்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story