திருப்பூரில் குட்கா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் குட்கா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்,
திருப்பூரில் குட்கா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குட்கா விற்பனை
திருப்பூர் மாநகர் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் மற்றும் செரங்காடு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மொத்த விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி முதலிபாளையம் பிரிவில் போலீசார் நடத்திய சோதனையில், கோவை செல்வபுரம் ஐ.யு.டி.பி.காலனியை சேர்ந்த ரியாசுதீன் (வயது 34) என்பவரிடம் இருந்து 104 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரியாசுதீன் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குண்டர் சட்டம்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர் போதை மருந்து மனநிலை பாதிப்பு சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, ரியாசுதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து இதற்கான நகல் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story