தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலி
தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலியானார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வைசூர் அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரப்பா (வயது 66). விவசாயியான இவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராமசந்திரப்பா ஓட்டி சென்றமோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமச்சந்திரப்பா இறந்தார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story